இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.nandhini tamilnadu refugee

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழி லாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய் வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. 197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (21-ம் தேதி) மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

இது குறித்து நந்தினி கூறிய தாவது: மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிதேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய் வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

அதிகாரி விளக்கம் :

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.

நன்றி : ஹிந்து பத்திரிகை

மருத்துவ மாணவி நந்தினிக்கு என்ன நடந்தது? அவரது தந்தை ராஜா அவர்கள் விளக்குகிறார்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் என்ன நடந்தது என்பதை நந்தினியின் தந்தை திரு.ராஜா அவர்கள் பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேரடி நேர்காணல் இங்கே ஒலி வடிவில் கேட்கலாம்.

மறுக்கப்பட்டது கல்வியா இல்லை எங்கள் உரிமையா?? இந்திய அரசே பதில் சொல் – இயக்குநர்வ.கவுதமன் !!!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடுமுகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியனர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர்.

தனது பத்தாம்வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக்பள்ளியில் இலவசமாக மேல் நிலைக்கல்வியை பெற்றுள்ளார். அரசுபொதுதேர்வில் 1170 மதிப்பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப் பெண் 197.33 பெற்றுள்ளார்.

மருத்துவம் தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டு வரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள்மருத்துவப்படிப்பிற்குஒதுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில்தான் 1996-ஆம்ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சிகவிஞர். காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு களில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது.

இதனால் நந்தினி போன்ற பலமாணவ-மாணவியனர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்க்கு அனுமதிக்கும் போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாகவளரும் வாழும் எம் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதிகிடைக்கவேண்டும்.

இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வுக் காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில் வாடும் எம் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும்.

இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும்.
எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்படவேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக்கட்சித் தலைவர்களும் வேற்றுமைகலைந்து ஒன்றுப்பட்டுபோராடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நந்தினியின்கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

22.06.2014
சென்னை
நன்றி,
வ.கவுதமன்,
(திரைப்படஇயக்குநர்)

Advertisements