இலங்கையில் நடந்தது இனப்படுகொலை புத்தகத்தால் ஜெனிவாவை அதிர வைத்த பேராசிரியர் மணிவண்ணன்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை முழுவதையும் ஆவணப்படுத்தி ஜெனிவாவில் புத்தகமாக வெளியிட்டு பலநாட்டு சமூக மனித உரிமை ஆர்வலர்களிடம் பேராசிரியர் மணிவண்ணன் வழங்கி அதிரவைத்துள்ளார்.prof-manivannan srilanka genocide book

இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பில் ஜெனிவாவில் புத்தகம் வெளியிட்ட பேராசிரியர் மணிவண்ணன் லங்காசிறி வானொலியின் விசேட செய்தியாளரிடம் இது தொடர்பிலும் ஐ.நா கூட்டத் தொடர் தொடர்பிலும் விபரிக்கிறார்.

**
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா பிரேரணை முக்கியமானது: எமிலி ஹோவி மற்றும் பீட்டர் ஸ்பிலின்டர்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இலங்கையின் மனித உரிமை மேம்பாடு தொடர்பில் மிகவும் முக்கியமானது என அவுஸ்திரேலிய மனித உரிமை சட்டத்தரணி எமிலி ஹோவி தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் சிவில் யுத்தத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இது சிறந்த முன்னெடுப்பு.

மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் விசாரணை தொடர்பிலான கண்காணிப்புகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை அவதானிக்க முடியும். இது மிகவும் முக்கியமான ஒரு கட்டமைப்பு என்றார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது ஒரு முக்கியமான முன்னெடுப்பு என சர்வதேச மன்னிப்புச் சபையின் பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணையானது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் போன்ற விடயங்கள் தொடர்பில் சிறந்த வாய்ப்பாக இது அமையும் என ஜெனிவாவில் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை கூறியுள்ளார்.

Advertisements