சா்வதேச சூழல்களை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்தவில்லை

ஈழத்தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சர்வதேசம் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை கொண்டுவர முற்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சரியாக கையாளத்தவறிவிட்டது என தினக்குரல் பத்திரிகை சுட்டிக்காட்டியிருக்கின்றது.TNA

உயர்விற்கு நிகராக உண்மை வேண்டும்!

உண்மைக்கு நிகராக வாழ வேண்டும்!

பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளாக இதுவரை நாம் செயல்பட்டோம் என்பதற்கான ஆதாரம் யாரிடமுமே இல்லாத போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் எதிர்பார்பது எப்படி சாத்திய மாகும் .? கடந்தகால உயிர் தியாகம் தொட்டு புலம் பெயர் அமைப்புவரை மட்டுமல்ல ஊடகதர்மமானது ஒரு இனத்தின் விடுதலைக்கு அத்தியவசியமானது. தர்ம வழிகளைப் பேணத ஊடகங்கள் பல இருப்பதால்தான் எமது விடுதலை தோற்றது என குற்றம் சாட்ட முடியாதது போல் ஒன்றுக்கொன்று உந்து சக்தியாக நாம் எமது விடுதலைப்பணிகளை செய்யத்தவறி உள்ளோம் என்பதே காலத்தின் புரிதல்.

அதில் ஆரம்பமாக சமூகத்தின் ஆதரவைவிட சமூகத்திற்கு ஒவ்வொன்றும் திணிகப்பட்டது. சமூகம் புரிந்து கொள்வதற்கு பதிலாக எதிர்த்து நின்றது. எதிரிவளர்வதற்கு . புலானாய்வு என்பதற்கு பதிலாக ஒட்டுக்குழுக்கள் வளர்கப்பட்டது. புலம் பெயர் குழுவாதங்களது தவறுகள் மெளனிகப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு பலரது சதித்திடம் எதிரிக்கு ஆதராவாக தொடரும் போதும் ஒரு சிலரால் அதனை அடையாளமாக வழிநடத்தப்படுவது மக்களுக்கு நம்பிக்கையை தருகின்றது. மக்கள் சமூகம் தமக்கான கடமைகளை செய்யும் போது அதனைவழிநடத்தவேண்டிய தலைவர்கள் போல் ஊடகங்களும் தாம் எதிர்பார்பது எல்லாம் சரி என்பது யதார்தத்திற்கான நகர்வை எட்ட முடியாத போது வரலாற்றை எப்படி எங்கே தேடமுடியும். ?

ஈழத்தின் வரலாற்று உண்மைகள் மறைகப்பட்டதற்கு இலங்கையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் தமது கட்சிகளுக்கு பேரம் பேசும் தமிழக அரசியல் தலைவர்களும் காரணம் என்பதே உண்மை ஆகும் பேசியது தமிழ் தீண்டியது வன்முறை களை. அந்தவகையில் தற்போது உள்ள காந்தியினது காங்கிரஸ் கட்சியானது இலங்கைஎன்ற அரசியலுககும் ஈழத்தமிழினம் என்ற விடுதலைக்கும் ஆற்றிய பணியாக பல விடயங்களை நாம் மதிக்க வேண்டி உள்ளது. இந்தியா இராணுவம் நன்மைக்காக போய் தீமைகளை வளர்த்திருக்கலாம் . காலத்தின் தேவைக்கு சர்வதேச நகர்வை காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் என்ற அரசியல் நகர்வில் நாம் இன்று அடைந்துள்ள முன்னேற்றங்கள் அளப்பரியது. அதனை எதிர்த்த தமிழக அரசியல் நகர்வை நாம் சரியாக அவதானிகப்படாது விட்டால் உண்மைகளை மறைகப்பட்டுவிடும் சிலரது சிம்மாசனத்திற்காக சமூகம் தொடர்ந்து அடிமைகளாகப்பட்டு விடுவார்கள் .

யதார்தம் எம்மை தேடவில்லை வரலாறு எம்மை முதன்மைப்படுத்தும் போது அதற்கான கடமை என்பது அளப்பரியதாக கருதப்பட வேண்டும். என்பதற்கு அமைவாக நாம் எமது நம்பிக்கைகளை கைவிட முடியாது.

பாரத தேசம் என்பதும் தமிழினம் என்பதற்கும் அப்பால் உயிர் தியாகம் . வன்முறைகளால் வீழ்தப்பட்ட இரு தேசத்தின் வரலாறு பல எதிர்பார்ப்புக்களோடு தொடரப்படுவதே உண்மையும் வரலாறும்.

யதார்தம் பலதரப்பட்ட விடை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் ஆனால் சத்தியத்திற்காகபோராடுவதே வரலாறு ஆகும். காலத்தின் திசை அறிந்து கருணை காட்டுவது வரலாற்றுக்கடமை ஆக எதிர்காலம் வளர்கப்பட வேண்டும். இதுவே சமூகத்தின் சுதந்திரத்திற்கும் நாட்டின் நலனுக்கும் அத்தியவசியமானது. சந்தற்ப்ப வாதிகள் எதிர்பார்க்கலாம் ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கு பக்கபலமாக சர்வதேசம் மாறி உள்ளதை சந்தற்பம் ஆக்கி தமக்கான அரசியல் சந்தற்பங்களை தக்கவைத்துக்கொள்வதற்கு .

ஆனால் வரலாறும் எதிரிக்கு கூட சில சந்தற்பங்களை வழங்குவது எதிரியை சமூகம் புரிந்து கொள்வதற்கு .அந்த வகையில் எதுகுமே தெரியாத எம்மால் எதனைச் செய்வார்கள் என்ற கேள்வி, ஆதங்கம் , உண்மைகள் பலவற்றை உணர வைத்துள்ளது அதில் சமூகமூம் தெளிவு பட வேண்டியதே அவசியமாகும்.

அந்த வகையில் ஒரு வரலாற்றுப் போர் ஒரு சமூகத்தின் புரிந்துணர்வற்ற செயல்பாட்டினால் தோற்றுப் போனதல்ல சரியான அணுகுமுறைகளுக்காக சமூகத்தில் புரிதலுக்காகவும் உலகம் ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் தம்மையும் மாற்றி சமூகத்தையும் மாற்றி உள்ளது. இதற்கான வெற்றி வரலாற்றை சாருமே தவிர உண்மையை ஏற்பவர்களால் மட்டுமே உலகத்தில் எதனையும் சாதிக்க முடியும் . என்பது மட்டுமல்ல சாவிலும் சாதனைகளோடு இருதேசங்களின் எதிர்காலம் வரலாறாக உள்ளது. அதனை உண்மைவழிகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே யதார்தமாகும்.

தவறுகளைப்பற்றி அறிக்கை விடுவதோ யதார்தத்தை பற்றி சேவை செய்வதற்கும் அப்பால் நாம் எமது கடமைகளை சரியாக செய்கின் றோம் என்பதில்தான் முன்னேற்றங்களை காண முடியும். தனிப்பட்டவர்களின் எதிர்பார்புக்களாக நாம் எமது விடுதலையை இனம் காண முடியாது சமூகத்தின் எதிர்காலத்தை பாது காப்பதற்கு சரிதவறு என பல தரப்பிலும் இருந்தாலும் இருப்பவர்களை எதிரிக்காக மாற்றாமல் எதிர்புக்களை சந்திப்பதனை விட நம்பிக்கை வழிகளை நாம் விலக்க முடியாது.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நா.க.தமிழீழ அரசாங்கம். இந்தியா என பலதரப்பட்ட திசைகளில் எம்மை எதிரி மாற்ற முயற்ச்சிப்பதும் சர்வதேச நகர்வை மட்டும் நம்பிக்கை கொள்வதும் யதார்தங்களின் நகர்வே தவிர உண்மைகளை நாம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் ஒன்றுக்கொன்றான உந்து சக்தியே எமது இனத்தின் விடுதலைக்கான நகர்வானகும் அதனை தலைவர்களும் ;ஊடகங்களும் தமது தர்ம வழிகளாக கொள்ளப்பட வேண்டும்

உயர்விற்கு நிகராக உண்மை வேண்டும்!

உண்மைக்கு நிகராக வாழ வேண்டும்

ஈழம் வரலாற்றின் விதி!

மக்களது கருத்தாக .

சுவிஸ் ­தயா.

– தினக்குரல்!

Advertisements