ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் 25வீரவணக்க நாள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.BT Atlery-Attack 2009

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.
இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50-க்கும் அதிமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்

Thalaivar Black Tigers 1 Thalaivar Black Tigers 2 Thalaivar Black Tigers 3

தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

கரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில்

கரும்புலி லெப்.கேணல்மாறன்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்
மேஜர் மலர்ச்செம்மல்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Advertisements