விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே! இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2008 யூன் மாதம் (18.06.2008) சர்வதேச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு 2011 இல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் Ltte logo

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்விக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும்,

அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திரிப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதி மன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

Advertisements