விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை, சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது!

ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ய பயன்படுத்திய மூல ஆதாரங்களில் முக்கிய குறைப்பாடுகள் இருப்பது லக்ஸ்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உண்மையான ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.erik+solheim+norway+peace+killer13

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முன்னோடியாக கொண்டு செயற்பட்டுள்ளதுடன் இந்திய பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை நடத்தியதாக என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராயாது செயற்பட்டமை தொடர்பில் நீதிபதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடைக்கு விக்கிப்பீடியாவின் ஆதாரங்களை நம்பகமான ஆதாரங்களாக பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது.

அடுத்த ஆறுமாதங்களின் சாதமான தீர்ப்பு கிடைக்கும் என்ற மனநிலையில், விடுதலைப் புலிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரித்தானியா, நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய ஆணைக்குழு, விடுதலைப் புலிகள் அமைப்பைா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தன.

நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கூடியிருந்ததுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் விசாரணைகளை குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மனுதார்கள் சார்பில் ஆஜரான ஆம்ஸ்டர்டாம் தளமாக கொண்ட சட்டத்தரணி விக்டர் கோப், விடுதலைப் புலிகள் அமைப்பு, சிலரால் இன அழிப்பு என கூறப்பட்டுள்ள ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக நியாயமான போராட்டத்தையே மேற்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என வாதிட்டார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, சிரியாவின் ஜனாதிபதி பஸார் அல் அசாத்துடன் ஒப்பிட்ட அவர், பயங்கரவாத்தின் மீதான பிரித்தானியாவின் சோதிப்பு நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்தின் நினைவுக்கு கொண்டு வந்தார்.

இதே அரசாங்கம் நியாயமான போராட்டத்தை மேற்கொண்ட மண்டேலாவை பயங்கரவாதி என கூறியிருந்ததுடன் பின்னர் அவரது போராட்டம் நியாயமானமு என ஏற்றுக்கொள்ளப்பட்டது என கோப் கூறினார்.

அப்போது பதிலளித்த பிரித்தானிய பிரதிநிதி, கோப், பிரித்தானியாவின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்டதாகவும் ஆனால் இந்த விசாரணையின் நோக்கம் அதற்கு புறம்பானது எனக் கூறியுள்ளார்.

அரசியல் விடயங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து அதற்கான முனைப்புகளை மேற்கொள்கின்றனர் என்ற விடயத்தை கோப் மறுத்தார்.

விடுதலைப்புலிகள் போன்று ஆயுத மோதல்களில் ஈடுபடும் போராளிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற போதும் பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறைகள் இல்லை.

விடுதலைப்புலிகளின் தடையை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பேரவை விக்கிப்பீடியா ஆதாரங்களை பயன்படுத்தியமை நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் முடிவுகளை வைத்து விடுதலைப் புலிகளை தடை செய்தது கேள்வியை எழுப்பியுள்ளது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் கடந்த 5 வருடங்களாக எந்த தாக்குதல்களுடன் நடைபெறவில்லை. நிலைமை மாறியுள்ளது என கோப் தெரிவித்துள்ளார்.