இலங்கை செல்லும் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்கள்: தமிழ் மாணவ அமைப்பினர்கள் கண்டனம்!

இலங்கை சென்று கச்சேரி மேற்கொள்ள இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்களுக்கு தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.super_singers srilanka

விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் இலங்கை கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசெப் கல்லூரியில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.இதனை கோரல் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் எனும் இலங்கையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இவர்களின் இந்த இலங்கை பயணத்திற்கு மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் பணம் மற்றும் புகழுக்காக இந்த இசைக் கலைஞர்கள் செய்யும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

super_singers final song

இறுதிப்போட்டியில் தேசபக்தி என்று சொல்லிப் பாடப்பட்ட “விடை கொடு எங்கள் நாடே ” பாடலும் பின்ணனியில் திரையில் ஈழத்தமிழர்களின் அவலமும் காட்டப்பட்டது  இதுவும் வெறும் அனுதாப ஒட்டுக்காகத்தான் பாடப்பட்டிருகின்றது போலும் !

Advertisements