சொந்த தேசத்தில் நாடற்றவர்களாக வாழும் தமிழர்

கடந்த 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 60 வீதம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது.இவர்களில் பெரும் பன்மையானோர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் அரைப் பங்கிற்கு குறைவானவர்களே மீளத் தமது இடங்களுக்கு திருப்பியுள்ளனர். திரும்பி தத்தமது இடங்களுக்கு செல்வது தான் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் அதிகம் விரும்பப்படும் தெளிவான விருப்பமாகும்.இவ்வாறு பெரும்பாலானோர் தமது இடங்களுக்கு மீளத் திரும்பி செல்ல முடியாமல் இன்னும் அகதிக் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நிலை விரக்தியும், சலிப்புத் தன்மையும் மிக முக்கிய காரணியாக விளங்குகின்றது. தொடர்ச்சியான முகாம் வாழ்வு சோர்வு நிலைக்கு தள்ளியுள்ளது.

sri-lanka_idp campsஅரசு என்ற வகையில் போரின் காரணமாக இடம்பெறும் மக்களின் பாதுகாப்பினையும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதினையும் உறுதிப் படுத்தி இருக்க வேண்டும். இந்த மக்களின் இடம்பெயர்வு திடீரென ஏற்ப்பட்டதொன்றல்ல ஏற்கனவே எதிர் பார்க்க பட்டது தான் அரசு தான் அந்த மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் அழைத்து வந்திருக்கின்றது. வந்த மக்களை கௌரவமாக நடாத்துவதிலும், பராமரிப்பதிலும் அவர்களின் பாதுகாப்பை உருதிப்படுத்திலும் முழுமையாக தவற விட்டிருக்கிறது. இம்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் பாரிய முகாங்களை நிறுவதும், பாதுகாப்பு வலயங்களை உருவாகுவதும் வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு நிலங்களை ஒதுக்குவதும் வளங்களை கையகப்படுத்துவதும் நடந்து வருகின்றது. அது மட்டுமின்றி இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் பாரிய இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த குடியிருப்புகளுக்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டால் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தலும்,பொய் குற்றங்கள் (கஞ்சா ) சோடித்து கைதி செய்தலும் இடம்பெறுகின்றது.

இன்னொரு பிரதேசங்களுக்கு உள்நுழையும் அகதிகள் தமது பிரதேசங்களை சுவிகரிக்கின்ரனர் என்ற குற்றச் சாட்டுகள் ஒரே இனங்களுகளிடையே சண்டைகளாகவும், பகைமைகளாகவும் அதிகம் இடம் பெறுகின்றது. இந்த பிரச்சனை அவசியமற்ற பிரச்சனைகள் உருவாகுவதற்கான சூழலை ஏற்படுத்துகின்றன.

உள்ளக இடம் பெயர்ந்தோர் மத்தியில் காணப்பட்ட பதட்டங்களும் தவிப்புகளும் அவர்கள் தத்தமது கிராமங்களுக்கு திரும்பும் வெளி அங்கு காண்பதற்கு என்னென்ன பொருட்கள் எஞ்சியிருக்கப் போகின்றன என்பது குறித்த ஏக்கமும் நிச்சயத்தன்மையும் காரணம் எனலாம் இதே வேலை அவர்களது கைவிடப்பட்ட வீடுகள் சூரையாடலுக்கு இலக்கு ஆகி இருக்கலாம் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.ஆக மொத்தத்தில் இந்த சனங்களின் துயரம் மறைக்கப்படுகின்றது. ஆனால் இவர்களின் அபலமோ அவரவர் நலனுக்கும்,தேவைக்கும் ஏற்ற விதத்தில் வியாபாரமாக்கப்படுகின்றது

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் திரும்பித் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது தடுத்திருப்பது சூனியப் பகுதியாக இருக்கும் நிலம். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் தொடரும் மாவட்டம் என தெரிவு செய்யப்பட்ட காணிகளில் இன்னும் தகுந்த நிலையில் இல்லை அங்கும் எல்லாம் முடக்கப்பட்டு கிடக்கின்றது. இந்த நடவடிக்கை மேற் கொள்ளுவது மிக மந்த கதியாகவே இடம்பெறுகின்றது. என்பது திட்டமிட்ட செயலாக தெளிவு படுத்துக்கின்றது.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அகதிகள் நலன்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துடனும் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இன்னும் சரியான நிலையில்லை என்று கூறி காலம் கடத்துகின்றார்கள் மக்கள் அனைவரும் எந்த குறிப்பிட்ட நாளுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது காலம் கடந்த நிலையிலும் தொடர்ந்து .பயன்படுத்தி வரும் சொற் பிரயோகமாகத்தான் விளங்கின்றது. இப்படியான பிரச்சினை தொடர்பில், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் போது இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு, அந்த அழுத்தத்திலிருந்து வெளிவர இலங்கை அரசு முயல்கிறது

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்தியா 50,000 வீடுகளை கட்ட நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் வடகிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக கட்டித் தரப்படும். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் இலங்கையால் கூட்டாக நிறைவேற்றப்படும்.

இந்தத் திட்டத்துக்காக இந்தியா உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி விம்பமாக மின் ஆலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது இந்த அனல் மின்நிலையம் இந்தியாவின் தேசிய அனல்மின் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து கூட்டாக அமைக்கும்.இருதரப்புக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் இந்திய இலங்கை உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை யுத்தம் முடிவின் நான்கு ஆண்டுகளைக் கடந்து உள்ளது இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை இதை நம்பி மீளக்குடியமர்ந்த மக்கள் எதிர்பார்த்த வண்ணம் தற்காலிய கொட்டிகளில் வழ்கின்றனர். இதுவொரு நாடகம் என்பது தெட்டத் தெளிவாக தெரிக்கின்றது. அந்த மக்கள் மீளக் குடியமர்ந்தும் அகதியாகவும் ,ஏதிலியாகவும் இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் எதிர்க் குரல் கொடுக்க முடியாத அளவிற்கு, தமிழர் நிலமெங்கும் பல்லாயிரக்கணக்கில் பரவியுள்ள சிங்கள இராணுவமும் கடற்படையும் ஆயுதங்களுடன் வந்து தமிழ் மக்களை அச்சத்துக்குள் ஆழ்த்திவைத்து நலம்புரி நிலையங்களிலும் ,அகதி முகங்களிலும் முடக்கி வைத்துள்ளது.

– கோ.நாதன்

Advertisements