தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி. இந்தியாவின் இரட்டை நிலை

இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டதால் உடனே இந்திய அரசு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பை விலக்கி உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இந்திய அரசு.

ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ உடனே தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்த உத்தரவிடுகிறது. (700 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களின் பிணங்கள் இந்துமகாசமுத்திரத்தில் மிதக்கிறது) இதன் மூலம் இலங்கை உடனான நட்பை உறுதி செய்கிறது இந்திய அரசு.tamils not indians

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. பிறகு ஏன் தமிழர்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

சிந்தியுங்கள் 7 கோடி தமிழர்களே? உடனே செயற்படுங்கள்….

கீழே உள்ள செய்தி முழுவதையும் வாசியுங்கள்

தேவயானி கைது விவகாரத்தில் இந்தியா பதிலடி: அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் ரத்து

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் போலீஸார் அவரைக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்தபிறகே அனுமதிக்கப்படும். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:

“இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக எங்களின் வேதனையை அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளோம். எங்களின் எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெண் துணைத் தூதரின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

இதுபோன்று அதிகாரிகளை கண்ணியக் குறைவாக நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதைத் தவிர மேலும் சில பெரிய பிரச்சினைகளும் உள்ளன. அவை தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

ஷிண்டேவுடன் தேவயானியின் தந்தை சந்திப்பு

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவுக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவரின் தந்தையிடம் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதியளித்தார்.

தேவயானி கோப்ரகடேவின் தந்தை உத்தம், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் உத்தம் கோப்ரகடே கூறியதாவது: “இதுபோன்ற துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வகையில் பெரிய தவறு ஒன்றையும் தேவயானி செய்துவிடவில்லை. இந்த விவகாரத்தில் தேவயானிக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். தேவயானிக்கு தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பு உள்ளது என்று ஷிண்டே என்னிடம் கூறினார்” என்றார்.

சுஷீல் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளேன். தேவயானிக்கு விரைவில் நீதி கிடைக்கும்” என்றார்.

முன்னதாக அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் அழைத்துப் பேசிய மத்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், அரசு ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், “அமெரிக்க தூதரக ஊழியர்கள் சிலருக்கு ‘கூட்டாளி’ என்ற பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றச் செயல் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் அமெரிக்க தூதரக பணியாளர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?-வினவு-

**

இந்திய “நீதி”..

நியூயோர்க்கில் இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள துணைத் தூதர் தேவயானி கோப்ராகடே விடயத்தில் உலகளவில் மீண்டும் ஒரு முறை இந்தியாவின் மோசடி முகம் அம்பலப்பட்டிருக்கிறது.

தனது வீட்டில் பணிபுரிவதற்காக ஒரு இந்திய பெண்ணை வேலைநேரம் மற்றும் ஊதியம் தொடர்பான போலி தகவல்களை சமர்ப்பித்து ராஜீய அந்தஸ்தில் அமெரிக்க விசா எடுத்து கூட்டிசென்று அந்த பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்கா காவல்துறையால் தேவயானி கைது செய்யப்பட்டதற்கு இந்தியா இன்று போர்க்கோலம் பூண்டுநிற்கிறது.

இந்தியாவின் இந்த இரட்டை வேடம் உலக மனிதஉரிமையாளர்களையும் மனிதநேய அமைப்புக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தவறு செய்த தேவயானியை பணியிலிருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அழைத்து தண்டனையை வழங்க வேண்டிய இந்தியா மாறாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தையும் குற்றவாளிகளாக்கியது மட்டுமல்ல தேவயானிக்கான சட்ட பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் பிரதிநிதியாக நியமித்திருப்பது இந்திய “நீதி” யை உலகில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்திய அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகளுக்கும், இந்திய பார்ப்பனீய அதிகார வாக்கத்திற்கும் முன்னால் சக இந்திய மக்கள் தினம் தினம் சூiறாயாடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய நீதியை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு சம்பவம் இது.

அமெரிக்க அரசோ – அதிகார வர்க்கமோ ஒன்றும் யோக்கியர்கள் கிடையாது. ஆனால் இந்த சம்பவத்தில் அமெரிக்க காவல்துறை மிக நேர்மையாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் நின்று இந்த வழக்கை கையாண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து தேவயானியும் இந்திய அதிகாரவர்க்கமும் பொய்களை புனைந்தபடியே இருக்கிறார்கள்.

தேவயானி கோபர்கடேயைக் கைது செய்ய உத்தரவிட்ட அமெரிக்க நீதித்துறை அரச வழக்கறிஞர் ப்ரீத் பராரா “ஒரு இந்தியர் நடத்தப்பட்ட விதம் என்று கூறப்படும் இது குறித்து எழுந்திருக்கும் கோபாவேசம் மற்றொரு இந்தியரும் ( பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்) அவரது கணவரும் நடத்தப்பட்ட விதம் குறித்து எழவில்லை என்பது வியப்பாக இருக்கிறது ” என்று அதிர்ந்துபோய் ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார்.

அவரை மட்டுமல்ல உலகையே இந்தியாவின் இந்த போக்கு அதிர்ச்சியுற செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்டமக்கள், போராடும் மக்கள் தொடர்பான இந்திய நீதி நாம் அறியாததல்ல. சாதிக்கு ஒரு நீதியும், மதத்திற்கு ஒரு நீதியும் முன்வைக்கும் இந்தியத்தின் நீதியும் நாம் அறியாததல்ல.

தமது சொந்த மக்களை பலிகொடுத்தாவது, தமது அதிகாரவர்க்கத்தை காப்பாற்றும் இந்தியாவின் அயோக்கியத்தனம் உலகளவில் அம்பலப்பட்டதுகூட தெரியாமல் தொடைதட்டி நிற்கிறது இந்தியம்.

பாவம் இந்திய மக்கள். இந்திய ஊழல் அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகளுக்கும், இந்திய பார்ப்பனீய அதிகார வாக்கத்தினதும் “நீதி” க்குள் சிக்கியுள்ள அவர்களை மீட்க எந்த மீட்பர் வரப்போகிறாரோ தெரியாது.!

குற்றம் இழைத்த தேவயானிக்கு பதவியுர்வை பரிசாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணான சங்கீதாவிற்கு களியையும், கம்பிகளையும் பரிசாக அளிக்க திரண்டு நிற்கிறது இந்தியம்.

வாழ்க இந்தியா.. வாழ்க ஜனநாயகம்…

ஈழம்ஈநியூஸ்

Advertisements