கருணாநிதியின் துரோகத்தால் மாண்ட தமிழர்கள்: ஆதாரங்களுடன் அம்பலம்

டெசோ நாயகன் கருணாநிதியின் இரட்டை வேடம். 2009 ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம். ஈழப் போர் உச்சக் கட்டத்தை எட்டியிருந்த காலம். அங்கு காயம் பட்ட போராளிகளும், பொதுமக்களும் சிகிச்சைக்கு மருந்தே கிடைக்காமல் அநியாயமாக உயிரிழந்து கொண்டு இருந்தனர்.karunanithi teso

லண்டனிலிருந்து சென்னைக்கு தன் நண்பரின் திருமணத்துக்காக வருகிறார் ஒரு ஈழத் தமிழர். அவர் இங்கிலாந்துக் குடிமகன். சென்னைக்கு அவர் வர இருப்பதை அறிந்து, இங்கே உள்ள ஒருவர், அவரிடம் ஒரு லேப்டாப் எடுத்து வருமாறு கேட்கிறார். அதன்படி எடுத்து வருகிறார். நண்பரின் திருமணத்துக்கு செல்லும் வழியிலேயே அவர் கைது செய்யப்படுகிறார்.

அதற்குப் பின், மேலும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். தனித்தனியாக கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கில், மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த 17 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் அவர்கள் இலங்கைக்கு மருந்து மற்றும் ரத்த உறைகளை கடத்தினார்கள் என்பதுதான்.

இதற்காக கைது செய்யப்பட்டார்களே தவிர, அது குறித்து வழக்கில் சேர்க்கப்படாமல், சேட்டிலைட் போன் வைத்திருந்தார்கள் என்பது மட்டும் பொய்யாக ஜோடித்து சேர்க்கப்பட்டது.

இலங்கைக்கு உண்மையிலேயே மருந்து கடத்த முயன்றவர்களும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து உயிர் காக்கும் மருந்துகள், ரத்த உறைகள் மற்றும் 80 லட்சத்துக்கு மேற்பட்ட பணம், கருணாநிதியின் க்யூ பிரிவு காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
இந்த பணம், மருந்துகள் மற்றும் ரத்த உறைகள் எதுவுமே கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த நடவடிக்கைகளை மத்திய உளவுத்துறையின் வழிகாட்டுதலின்படி செய்து முடித்தவர், அப்போதைய தமிழக அரசின் உளவுத் துறை தலைவர் ஜாபர் சேட். இவர் தான் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதில் கில்லி எனப் பெயரெடுத்தவர்.

மருந்துகளைக் கூட இலங்கைக்கு தமிழர் பகுதிகளுக்கு செல்ல விடாமல், மணிமேகலைக்கு விசுவாசமாக இருந்தவர்தான் டெசோ நாயகர். பொய்யாக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த துயரம் சொல்லி மாளாது. கருணாநிதி அரசின் க்யூ பிரிவு காவல்துறை இவர்களை மிரட்டாத நாளில்லை.
கைது செய்யப்பட்ட லண்டன் வாசி சென்னை வருகையில் அவர் மனைவி நான்கு மாத கர்ப்பம். தற்போது அவர் குழந்தைக்கு 4 வயது.

நேற்று இந்த வழக்கிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதே நேரத்தில், ஆட்சியில் இருந்தபோது ஈழத் தமிழர்களை வரைமுறையற்று கொடுமைப் படுத்தி சிறையில் அடைத்த கருணாநிதி, இன்று ஈழத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதைப் பார்க்கையில் எரிச்சலும் கோபமுமே ஏற்படுகிறது.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த தோழர்களின் விடுதலை ஏற்படுத்தும் மகிழ்ச்சியின்போது, இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்கள் விஜயக்குமார் மற்றும் பகத்சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்களை சொல்வதும் நமது கடமை.

தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்த போது, மத்திய அரசுக்கு வால் பிடித்து… இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கி விட்டு… அதனை வேடிக்கை பார்த்து விட்டு… காயம்பட்டவர்களுக்கு சேர வேண்டிய மருந்துகளைக் கொண்டு போனவர்களைக் கூட கைது செய்து சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்திய கருணா(ய்)நிதி தான் இப்போது டெசோ நாடகம் போடுகிறார்…

ஒழுங்கான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் துடித்து துடித்து இறந்த ஈழத் தமிழர்களின் ஆன்மா உன்னை ஒருநாளும் நிம்மதியாக தூங்க விடாது..

கருணாநிதி என்பவன் ஈழத் தமிழர்களுக்காக என்ன நாடகம் போட்டாலும் அவன் ஒரு பச்சைத் துரோகி என்பதனை உலகம் இருக்கும் நாள் வரைக்கும் உலகத் தமிழினம் சொல்லும்…karunanithi traitor dramas