போரின் வலிகளை போர்க்குற்ற ஆதாராமாக்க கெலும் மக்ரே முன் சாட்சியம் பகிர முடியுமா?

இலங்கையின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே முன்னிலையில், போரின் வலிகளை சாட்சியமாக பதிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.SRI LANKA-UNREST-BRITAIN-MEDIA-FILES

போர் – இரணவலிகளை சனல்- 4 முன்னிலையில் பதிவாக்க விரும்புவோர்கள் தமது மனுக்களை தனிப்பட்ட முறையில் கையளிக்கலாம்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பை ஐநாவிலும் உலக அரங்கிலும் ஆதாரப்படுத்திய சனல் 4 ஆவணப்படம் சுவிஸில் திரையிடப்படுகின்றது. அத்துடன் ஆவணப்படத்தை தயாரித்த கெலும் மக்ரே அவர்களுடன் தமிழ்மக்களுக்கான நேரடிக் கலந்துரையாடலும் நன்றி நவிலலும் நடைபெற்ற பின்னர் ஆவணப்படம் திரையிடப்படும்.

நிகழ்வு: 1 தமிழ் மக்களிற்கு
இடம்:- Hombergerhaus Ebnatstrasse 86
8200 Schaffhausen
காலம்:- 10.12.2013 (செவ்வாய்க்கிழமை)
நேரம்:- 19:00 மணிக்கு

நிகழ்வு: 2 சுவிஸ் மக்களிற்கு
இடம்:- ORIENT Musik Klub
Stadthausstrasse 13, 8200 Schaffhausen
காலம்:- 11.12.2013 (புதன்கிழமை)
நேரம்:- 19:00 மணிக்கு

Advertisements