முள்ளிவாய்க்கால் முற்றமும் அதன் பெருமையும்

தமிழ்நாட்டு மாநிலத்தில் தஞ்சாவூர் வயலும் வயர்சார்ந்த இடமாக காணப்படும் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இடம்தான் தஞ்காவூர். சோழர் அட்சிகாலத்தில் தலைநகரமாக விளங்கியதும் இந்த தஞ்சாவூர்தான். தஞ்சாவூரில் உலக வரலாற்கு புகழ்மிக்க இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருங்கோயில் தஞ்சாவூரின் வரலாற்றினை எடுத்து சொல்கின்றது. அத்துடன் அல்லாமல் தமிழுக்கு என்று முதன்முதல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமும் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்தான் காணப்படுகின்றது.tamilnadu mutram

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டினை வளர்ப்பதற்காக தென்னக பண்பாட்டு மையமும் தஞ்சாவூரில்தான் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் மெல்லிசைக்கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்பூரா போன்ற கருவிகள் இங்குதான் செய்யப்படுகின்றது. இவ்வாறு தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க தொன்மைகளும் பண்பாடுகளும் கொண்ட தங்சாவூரில் அமையப்பெற்றதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

இந்த நினைவுமுற்றம் தஞ்சாவூரில் அமைப்பதற்கான காரணங்கள் பல உண்டு. ஆனால் தமிழர்களின் வரலாற்று சின்னமாக இன்றும் காணப்படும் தஞ்சாவூர் ஈழத்திமிழர்களின் வரலாற்று சின்னத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது இந்த ஊரில் வாழ்பவர்கள் பிறந்தவர்களை பெருமைகொள்ள வைக்கின்றது. இப்படிப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க முற்றமாகும். இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களின் வீரம், போர் உயிர்கொடை, தியாகிகளின் வரலாற்றினை பறைசாற்றி நிக்கின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டு இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 6ம் நாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகர்பகுதியில் அதாவது தஞ்சைமையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விளார் சாலையில் திருச்சி – நாகபட்டினம் நெடுஞ்சாலைக்கு அருகில் விளார் தஞ்சாவூர் வீதியில் மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் பூங்காவும் அதனை சார்ந்த நீர்தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்சுற்று மதிலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உலகத்தமிழர் இலச்சினைகள் பொறிக்கப்பட்டு மின்விளங்குகள், நீர் விசிறிகள், பச்சைபுற்கள், பூக்கன்றுகள், பெரிய சிறிய பச்சை மரங்கள் என ஒரு பூங்காவிற்குள்ள அனைத்தும் வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கின்றது.

உள்ளே செல்வதற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாற்றினையும் அவர்களின் வாழ்வியலினையும் சித்தரிக்கும் சிற்ப கல்லு மதில்போல காட்சிதருகின்றது. அந்த சுவரில் உள்ள பேசும் சிற்பங்கள் இடமிருந்து வலமா பார்க்கும் போது தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இயற்கை எழில்மிக்க வாழ்இடத்தில் குருவிகள் கூடுகட்டி சந்தோசமக வாழ்வதையும் பறையடிக்கும் ஒரு மனிதன் தமிழரின் பண்பாட்டினையும் குருவிகூட்டங்களில் வாழ்வு தமிழரின் குடும்ப ஒற்றுமையான வாழ்வியைலையும் எடுத்து நிக்கின்றது.

அதன்பின்னர் தமிழரின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த சிங்களவர்களின் அடக்குமுறையினை காட்டும் விதமாக சிறையில் குட்டிமணி தங்கத்துரையினர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் கண் படையினரின் காலால் மிதிக்கப்படும் காட்சி கருங்கல்லில் சிலையாய் வரையப்பட்டுள்ளது. அதன் அடுத்தபகுதி தமிழர்களின் வரலாற்று பொக்கிசமான யாழ்நூலகம் 1981 ஆம் ஆண்டு சிங்கள காடையனர்களினால் எரிக்கப்பட்ட வரலாற்றினை அவ்வாறே சொல்லிநிக்கின்றது. பொதுசன நூலகம் யாழ்ப்பாணம் என்று யாழ் நூலகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கீழ் சரஸ்வதி அமர்திருப்பதும் சுற்றிவர தீ பற்றி எரிவதுமான காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தமிழர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள், தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சமாதான புறாக்கள் மேலே பறக்கின்றன, தமிழர் மேல் குண்டுகளை போட்டபடி இவ்வாறான ஒரு சிற்பம் காட்டி நிக்கின்றது. அதன்பின்னர் தமிழர்களின் இடம்பெயர்வு, வாழ்ந்த இடம் இழந்து அகதியாக ஊர் ஊராக அலையும் தமிழரின் காட்சி…

இவ்வாறு வளாகத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் தமிழீழ விடுதலைக்காக தீக்குளித்த ஈகிகைளின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. உடல்பல ஆயினும் ஒன்றே தமிழ்மணம் ஊர்பல ஆயினும் ஒன்றே தமிழினம், கடல் தடை ஆயினும் ஈழம் எம் தமிழ் நிலம், கரை இரண்டேயாயினும் ஒன்றே குலம்! ஒரேகுலம்!

தீக்குளித்த ஈகிகளின் விபரம்

02.03.2009 அன்று தமிழ்நாடு வாணியம் பாடி சீனிவாசன்,
08.02.2009 அன்று சென்னையினை சேர்ந்த அமரேசன்
22.03.2009 அன்று சிவகாசியினை சேர்ந்த மாரிமுத்து
02.03.2009 அன்று கொத்தமங்கலத்தினைசேர்ந்த பாலசுந்தரம்.
05.03.2009 அன்று சென்னையினை சேர்ந்த ஸ்ரீதர் என்று அழைக்கப்படும் எழில்வளவன்.
17.03.2009 அன்று அன்னவல்லியினை சேர்ந்த ஆனந்த்.
15.12.1995 அன்று பெரம்பலூரினை சேர்ந்த அப்துல் ரவூப்.
02.02.2009 அன்று மலேசியாவினை சேர்ந்த ஸ்டீபன் செகதீசன்.
18.02.2009 அன்று கடலூரினை சேர்நச்த தமிழ்வேந்தன்.
23.04.2009 அன்று திருப்பூரினை சேர்ந்த சுப்பிரமணி
29.01.2009 அன்று சென்னையினை சேர்ந்த முத்துக்குமார்.
02.02.2009 அன்று பள்ளப்பட்டியினை சேர்ந்த இரவி.
17.03.2009 அன்று காட்டுநாகலேரியினை சேர்ந்த இராசசேகர்.
17.04.2009 அன்று சென்னையினை சேர்ந்த கரூர் சிவானந்தம்.
25.02.2009 அன்று சிவகாசியினை சேர்ந்த கோகுலக்கிருட்டிணன்.
07.02.2009 அன்று சீர்காழியினை சேர்ந்த இரவிச்ந்திரன்.
07.02.2009 அன்று மலேசியாவினை சேர்ந்த இராசா.
18.04.2009 அன்று சீகம்பட்டியினை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
12.202009 அன்று ஜெனீவாவினை சேர்ந்த முருகதாசன்.
22.02.2009 அன்று சென்னையினை சேர்ந்த சிவப்பிரகாசம்

ஆகிய ஈகிகளின் உருவம் கற்சிலையாக பொறிக்கப்பட்ட நீண்ட சிலை ஒருபுறம் மறுபுறத்தில் தமிழினத்தின் மீது சிங்கள அரசு படையினர் மேற்கொண்ட இனஅழிப்பின் கொடூரங்கள் சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.

அதில் இருந்து…

இனவெறி சிங்களவன் கொலைவெறி ஆடினான்.
இளந்தமிழ் மாணவர் விழி இமை மூடினான்
கனல் எறி நஞ்சுக்குண்டுகள் கொண்டினான்
கழுத்தை நாக்கை மார்வை வெட்டினான்…

என்ற கவிதையுடன் தொடர்புடை பேசும் சிற்பம் முள்ளிவாய்க்கால் அவலத்தினை சொல்லிநிக்கின்றது.

நந்தமிழ் மாந்தர் தலைதனி ஆனதே
நமதுயிர்ப் பனையின் உயிர்பறி போனதே
செந்தமிழ் நிலமிசை கொடும்பகை குதித்ததே
செத்தார் உடலையும் செருப்பு மதிக்குதே….

என்ற கவிதையுடன் டாங்கிகளுடன் படையினர் நகர்வதையும் கைகள் கட்டப்பட்டு சப்பாத்து காலால் தமிழன் மிதிபடுவதையும் பேசும் சிற்பங்கள் பேசுகின்றன.

வெடித்த கொத்துக்குண்டுகள் எத்தனை
வெறியன் அழித்த பிஞ்சுகள் எத்தனை
அடித்துக்கொன்ற மாடுகள் எத்தனை
அம்மணம் ஆக்கிப்போட்டவர் எத்தனை…

என்ற கவிதையுடன் கொத்துக்குண்டுகள் தமிழ் வாழ் இடங்களில் மேல் விழுவதும் மாடுகள் சிறுவர்கள் பெரியவர்கள் அதில் உயிரிழப்பதும் அடுத்து கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்மணமாக கிடக்கும் தமிழர்களின் உடலங்கள் சிங்களவர்களின் இனப்படுகொலையின் உண்மை சாட்சியாக பேசுகின்றது.

அழிந்து கிடந்தன காட்டின் மரங்கள்
அடுக்கிக் கிடந்தன தமிழர் பிணங்கள்
கிழிந்து நிடந்தது தமிழர் தேயம்
கிடந்தது நெருப்பில் மாந்த நேயம்…

என்று பனைமரங்கள் படையினரின் குண்டடிபட்டு கிடக்கின்ற காட்சியும் மனித பிணங்கள் கட்டுக்கட்டாக போட்டப்பட்டுள்ள காட்சியினையும் பேசும் சிற்பங்கள் மக்கள் பார்வையில் கண்ணில் கண்ணீரினை சிந்த வைத்தது…

முறைகெடச் சிங்கள இனவெளி பாய்ந்தது
முள்ளியவாய்க்காலில் அறநிற சாய்ந்தது
நிறைமுன் வேலி தமிழினம் பா£த்தது
சிவந்து சிவந்து கார்திகை பூத்தது…

என்ற கவிதையுடன் ஒப்பிட்ட தமிழர்கள் சிறையில் அடைக்கப்ட்ட காட்சி அதாவது முள்கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்ட கோரத்தினை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள்…

கணம்தோறும் ஆயிரம் பிணங்கள் விழக்கண்டோம்
காற்றேலாம் அழுகுரல் தினம் எழக் கண்டோம்
பிணங்களைத் தகரிகள் மதித்தலும் கண்டோம்
பெற்றோர் உறவுகள் கொதித்தாலும் கண்டோம்…

என்று மனித பிணங்களை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் எவ்வாறு படையினரால் டாங்கிகள் கொண்டு நசித்துக் கொல்லும் காட்சி பேசும் சிற்பங்களாக முள்ளிவாய்க்காலின் சாட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளது..

நாடிழந்த தலையும் அடிமையா தமிழன்?
நாய்கள் தின்னும் பிணமா தமிழன்?
கோடி வலிமை கோடி தாங்குவோம்?
கொற்ற மணித்தமிழ் ஈழம் வாங்குவோம்….

என்ற கண்ணூடான காட்சியனை தாவது முள்ளிவாய்க்கால் மண்ணில் பிணங்கள் கொத்துக்கொத்தாக கிடப்பதனையும் அதனை நாய்கள் தின்னுவதையும் காட்சிபடுத்துவதோது அகதியாக கையில் பாத்திரத்துடன் கஞ்சிக்காக காத்திருக்கும் நிலையில் இடப்பெயர்வு தமிழனுக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளதையும் காட்டிநிக்கின்றது..

இவை அனைத்தினையம் தாங்கி இடதுபுறத்தில் அமைந்துள்ள சிற்பம் பார்ப்பவர்கள் கண்ணை கவரும் ஈர்க்கும், ஈகவைக்கும், தமிழர்களின் வரலாற்றினை தெரியாதவர்களை புரியவைக்கும். குறிப்பாக இவ்வாறும் நடந்ததா என்று கூட ஏங்கும் அழவிற்கு அந்த பேசும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டிற்கும் நடுவில் ஒரு மேடை அதில்தான் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தமிழ்பாவை கையில் தீபத்தினை ஏந்தியவாறு நிக்கின்றாள். இதற்கு கீழ் அறையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் பார்வதி அம்மாளின் உடலின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழரின் அழிவு என்பதை இலட்சினையாக காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பின்னால்தான் மாவீரர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக தமிழர்களின் வரலாற்று சுவடுகள், தமிழீழ தமிழர்களின் வரலாற்று சுவடுகள், இனப்படுகொலையின் பேசப்படாத வரலாறுகள் நடுவில் தாங்கியவாறு மண்டபம் அமையப்பெற்றுள்ளது. இதில் குறிப்பாக தமிழக தமிழர்களின் வரலாறு கி.மு 1000 ஆம் ஆண்டு என்று சொல்லப்படும் தொல்பழங்காலம் தொடக்கம் கி.மு 500 தொடக்கம் கி.பி 250 வரையான சங்ககாலம், கி.பி 250 தொடக்கம் கி.பி.575 வரையான களப்பியர் காலம், கி.பி. 250 தொடக்கம் கி.பி 919 வரை பல்லவர் காலம் (அதாவது தமிழகத்தை பல்லவர் ஆட்சிசெய்த காலம்), கி.பி 575 தொடக்கம் கி.பி 966 வரை தமிழ்நாட்டை முதலாம் பாண்டிய பேரரசு ஆட்சிக்காலம், கி.பி 846 தொடக்கம் கி.பி 1279 வரை பிற்கால சோழபேரரசு காலம், கி.பி 1190 தொடக்கம் கி.பி 1311 பிற்கால பாண்டிய பேரரசு காலம், கி.பி 1335 தொடக்கம் மாபார் சுல்தானியம் காலம்.

கி.பி. 1529 தொடக்கம் கி.பி 1736 வரை தமிழகத்தை நாயக்கர் ஆட்சிசெய்த காலம், கி.பி 1676 தொடக்கம் கி.பி 1855 வரை தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலம், கி.பி 1698 தொடக்கம் கி.பி 1855 கர்நாடக நாவாபுகளின் காலம், கி.பி 1801 தொடக்கம் கி.பி 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் என்று இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெற்ற 15.08.1947 ஆம் நாள் வரையிலான இந்தியாவில் தமிழக விடுதலையும் தமிழகத் தமிழர்களின் வரலாறும் எத்தனையோ தமிழ்நாட்டவர்கள் அறிந்துகொள்ளமுடியாத தகவல்களும் ஒளிப்படங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் தமிழீத்திலும் காலூன்ற ஆங்கிலேய வல்லாதிக்கம் முயன்ற காலத்தில் அதை எதிர்த்து துணிவுடன் பேராடி மாண்ட மறைந்த மாவீரர்கள், அதைதொடர்ந்து தமிழீழ விடுதலை போரின் களத்தில் புகழை நிலைநிறுத்தி மண்ணில் வீழ்ந்த மாவீரர்கள், தமிழ்நாட்டில் மொழிகாக்கும் போரில் உயிர்தியாகம் செய்த மானமறவர்கள் மற்றும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்தியாகம் செய்த தீரர்கள், இந்திய துணைக்கண்ட விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள், ஒளிப்படங்கள் ஆகியவற்றை தாங்கி அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த முற்றம் எழுப்பப்பட்டுள்ளது.

‘கங்கை கொண்டான் கடராம் வென்றான்’ இலங்கை உள்ளிட்ட நாடுகளை ஒருங்கிணைந்து ஆண்டான் என்று தமிழர்களின் வெற்றிக்கு ஆதாரமாய் வரலாற்றில் எத்தனையோ பக்கங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்று முனைவர் ம.நடராசன் சொல்லியுள்ளார்.

தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்துகொள்ளும் அளவிற்கு காணப்படும் அதேவேளை தமிழீழ தமிழர்வரலாற்று சுவடுகளும் ஒளிப்படங்களுடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது இதனை அழிப்பதற்காக தமிழ்நாட்டு அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டு தமிழர்களின் வரலாற்றினை எடுத்துசொல்லும் முள்ளிவாய்க்கால் முற்றம் மறுபுறம் ஈழத்தமிழர்களின் அவலத்தினையும் அவர்களின் வரலாற்றினையும் சிலைகற்களாகவும் ஒளிப்படங்களாகவும் ஆவணம் செய்துள்ளது. தமிழீழத்திற்காக போராடிய இலட்சக்கணக்கான தமிழ்மக்களையும் மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் முள்ளிவாய்க்கால் முற்றம்.

தாயகத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவிற்கொள்ள தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை சிங்கள படையினர் அழித்தார்கள். மாவீரர்கள் என்ற நாமம் கூட இல்லாம் செய்து ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் விடுதலை உணர்வினை இல்லாமல் செய்வதற்கு இன்றும் துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி மாவீரர் துயிலும் இல்லங்களில் நாங்கள் எவ்வாறான உணர்வுடன் ஈகையுடன் செல்கின்றோமோ அந்த உணர்வினை இந்த கார்த்திகை மாதத்தில் கொண்டுவந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் அந்த முற்றத்தில் நிற்கும் போது ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் நினைவுகள் மனங்களில் நிறைந்திருந்தது.

தாயகத்தில் கார்த்திகை மாதம் என்றால் அது மாவீரர்களின் மாதம். அப்படிப்பட்ட நாளில்தான் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. தஞ்சையில் விளார் சாலையில் ஆங்காங்கே கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் அந்த மூன்று நாட்களும் மாவீரர் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட வண்ணம் இருந்தன. அணையா சுடராக பாலச்சந்திரன், சாள்ஸசின் நினைவு சிலைமுன் சுடர் எரிந்துகொண்டே இருந்தது. இரவு நேரத்தில் கண்ணை கவரும் ஒளியமைப்பு செய்யப்பட்ட இந்த சிற்பங்கள் மாவீரர் மண்டபங்கள் பூங்கவின் மரங்கள் எல்லாம் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும் உணர்விகை கொண்டுவந்து, இப்படிப்பட்ட உணர்வு மிக்க பேசும் சிற்பங்கள் பார்ப்பவர் கண்ணில் நீர்வடியும். தமிழர்களின் வரலாறு இப்படியா என வியப்புடன் அறியவைக்கும் ஒளிப்பட ஆதாரங்கள்.

ஈழத்தமிழர்களின் மனங்களில் உறையவைக்கும் உணர்வுகளுக்கு அப்பால் தமிழ்நாட்டு தமிழர்கள் அதனை பார்த்துவிட்டு உணரவைக்கம் அளவிற்கு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

மாவீரர்கள் விபரம்…

05.06.1974 ஆம் ஆண்டு நஞ்சை படைக்கலம் ஆக்கிய முதல் போராளி என்ற பொன் சிவகுமரான் படமும் வரலாற்று குறிப்பும்.
25.07.1983 ஆம் ஆண்டு கண்ணை கொடுத்து உயிரைக்கொடுத்து மண்ணைக்காத்த சிறைமறவர்களான ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி
27.11.1982 ஆம் ஆண்டு அன்று முத்தமிழ் வளர்த்த மதுரை நகரில் விடுதலை வளர்க்கும் தலைவர் மடியில் விடியலுக்காக மடிந்த முதல்புலி லெப்ரினன் சங்கர்.
10.10.1987 அன்று எதிரியை முறியடித்து மாண்ட முதல் மானத்தமிழிச்சி 2ஆம் லெப்ரினன் மாலதி.
20.05.2008 அன்று தமிழீழ தேசியத்ததலைவரின் நம்பிக்கைள ஒளி புலிகளில் இவன் சிகரற்ற புலி பிரிகேடியர் பால்ராஜ்.
15.02.2009 அன்று எரிமலை நெருப்பில் நீந்தி ஈழம்காத்தவன் தமிழேந்தி. கேணல் தமிழேந்தி அவர்களின் படம்.
05.07.1987 அன்று முதல் கரும்புலி இவன் மூச்சு ஆயிரம் புலியின் வீச்சு கப்டன் மில்லர்.
16.08.1994 அன்று தன்னையும் தகர்த்து எதிரிபோர்க்கப்பலையும் மூழ்கடித்து அடிமை விலங்கை உடைத்தவர் கப்டன் அங்கயற்கண்ணி.
26.09.1987 அன்று தண்ணீரும் தாகத்தில் செத்தது திலீபன் உண்ணாப்பேரின் நினைவுச் சின்னம் தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன்.
14.12.2006 அன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தேசத்தின்குரல் வழிகாட்டும் விரல்.
19.04.1988 அன்று போர்நிறுத்தம் கோரிய தமிழீழ அன்னை. இவள் உண்ணாதிருந்து உயிர்கொடை தந்தாள் தன்னை, அன்னை பூபதி.
16.01.1993 அன்று அறுந்தன இந்தியாவின் சூழ்ச்சிவலைகள். கடலில் தமிழர் மானம் காத்த தமிழீழ மலைகள் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வேங்கைகள்.
05.10.1987 அன்று இந்திய வஞ்சனை இவர்களுக்கு நஞ்சினை தந்தது. பன்னிருவேங்கைகளாம் லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்கள்.
02.11.2007 அன்று சிரிப்பாகவும் நெருப்பாகவும் பூத்து உதிர்த்தவன் இவன். சாவுக்கு எதிரில் சிரித்துக்கொண்டே சாய்த்தவன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்கள்.
14.02.1987 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப்ரினன் கேணல் பொன்னம்மான்.
13.03.1988 அன்று இந்திய இரண்டகத்தில் சிந்திய தமிழர் குருதி எதிரியை வீழ்த்த இவர் பெயர் கண்ணிவெடி லெப்ரினன் கேணல் ஜொனி.
20.02.2009 அன்று தமிழர் வான்படை உயரப்பறந்தது. எதிரியைப் பொசுக்கு உயிரைத் துறந்தது கேணல் ரூபன், லெப்ரினன் கேணல் சிரித்திரன்.
15.05.2009 அன்று தமிழீழத்தின் நெருப்பாறு தனி வரலாறு இவன். வரலாறு பிரகேடியர் சொர்ணம்.
05.04.2009 அன்று அன்னை மண்ணை உயிராய் நினைத்தான். ஆனந்தபுரத்தில் சாவோடு இணைந்தான் பிரிகேடியர் தீபன்.
04.04.2009 அன்று பெண் போராளிகளின் திசைகாட்டி ஆனந்தபுரத் தாக்குதலில் இறுதியில் விதையாக தீர்ந்தவள் பிரிகேடியர் துர்க்கா.
04.04.2009 அன்று நாடு பேற்றும் பெண்புலி போராளி நான்காம் போரில் நீத்த பிரிகேடியர் விதுசா.
18.05.2009 அன்று அமைதிப்புறாவை அழித்தனர் அம்மா. வெள்ளைக்கொடியில் குருதி சாயம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோரின் படங்களுடன் தந்தைக்கேற்ற தனையன் என்ற சாள்ஸ்சின் படமும், மார்பு காட்டியமகன் பாலச்சந்திரன், பார்வதி அம்மையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆகியோரின் ஒளிப்படங்களும் வரலாற்று சிறுகுறிப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளது.

அணையா விளக்கு…

இவற்றுக்கு அப்பால் உலகத்தின் பார்வையினை திருப்பிய அனைத்து தமிழ் மக்களின் மனங்களிலும் பதிந்த பாலச்சந்திரன் எவ்வாறு சுடப்பட்டு கிடந்தானே எவ்வாறு படையினரால் பிடிக்கப்பட்டு வாயில் பிஸ்கற்ரினை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தானோ அதேபோல் ஒரு பாரிய கல்லில் இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

பாலச்சந்திரன் எவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டு பச்சை மண்மூட்டை அடுக்கிய இடத்தில் வைத்து பிஸ்கட்டினை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் காட்சியினை மிகவும் தத்துரூபமாக சிற்பிகள் அதனை செதுக்கியுள்ளார்கள். அத்துடன் பாலச்ந்திரனின் நெஞ்சில் நான்கு குண்டுகள் பாய்ந்தபடி இவ்வாறு கீழ்விழுந்து கிடந்தானோ அதேபோல் அவன் நெஞ்சில் துளையிடப்பட்டுள்ள காட்சியும் சிலையாக காணப்படுகின்றது. அண்ணனையும் தம்பியையும் ஒரேகல்லில் சிற்பி செதுக்கியுள்ளார். இவர்களில் சாள்ஸ் எவ்வாறு போர்த் தளபதி என்ற வீரத்துடன் நிக்கின்ற சிற்பம், வீரச்சாவடைந்து கிடக்கின்ற காட்சி, இந்த சிலைக்கு முன்னால் அணையா விளக்கு எரிந்துகொண்டே இருக்கின்றது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிற்பிகள் சிறப்புற செதுக்கியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டாலும் அதனை முடக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. விடுதலை உணர்வும் தமிழன் என்ற உணர்வும் இருந்துவிடகூடாது என்பதற்காக தாயகத்தில் சிங்களவன் செய்யும் அடக்கு முறைக்கு அப்பால் ஒரு சுதந்திர நாடு என்று சொல்லப்படும் இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழர் மீதான அடக்குமுறை என்பது துப்பாக்கி ஏந்திய படையினரின் அடக்குமுறையிலும் விட மேலாகக் காணப்படுகின்றது.

சுதந்திரம் என்று சொல்லப்படும் சொல்லுக்கு அர்த்தமற்ற தமிழர்களாக தமிழ்நாட்டில் தமிழர்களை மத்திய அரசும் மாநில அரசும் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அடக்குமுறையின் உச்சம், உணர்வுகள் மழுங்கடிக்கப்படவேண்டும் என்று சிங்கள வெறியனின் செயல் தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கம் வேளை, அதனைவிட மோசமாக தமிழ்நாட்டில் சட்ட அடக்குமறையினை தமிழக அரசும் மத்திய அரசும் மேற்கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டவடிவங்களை திசைதிருப்பி அதன் ஊடாக அவர்களை அடக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றது தமிழக அரசு இது. அண்மையில் தமிழ்நாட்டில் மாணவர்களின் விடுதலை போராட்ட உணர்வினை வெளிப்படுத்தவிடாமல் அவர்களை கைது செய்துள்ளதும் அவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் விடுவதுமான செயல்காளில் ஈடுபட்டுள்ளார்கள்.

உலகத்தமிழர்களின் எதிர்பார்பிற்கு அப்பால் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் அழிந்துவிடா வரலாற்று சின்னமாக இருக்கவேண்டும் என்பதில் உலகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதில் உறுதியாக இருக்கின்றது. இதற்காக உதவி செய்தவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் இன்று தமிழக அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாட்டு முதல்வர் சூட்சுமமாக ஈடுபட்டுள்ளார். ஒருபக்கத்தில் ஆதரவாக பேசுவதும் தமிழ்நாட்டில் இன உணர்வாளர்களை அடக்குவதும் கைது செய்வதும் போராட்டங்களை முடக்குவதுமான அடக்குமறையின் உச்சகட்டக செயற்பாடுகளை நிழல்வடில் முன்னெடுத்துவருகின்றமையினை உலகத்தில் உள்ள ஈழத்திமழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சுதந்திரம் வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும். பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காக போராடுவதை தவிர எமக்குவேறு வழி எதுவுமில்லை என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக உலகத்தில் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழனும் தமிழீழ விடுதலைக்காகப் தொடர்நதும் போரடுவோம்.

-சுபன் (தஞ்சாவூர்)

நன்றி: ஈழமுரசு

Advertisements