தாயக விடுதலைக்காக வித்தாகி காவியமானவர்களின் கதையில் உருவான குறும்படம் “காலம்”

ltte rise 4தாயாக விடுதலைக்காக விதையாகிப்போன விடுதலை வித்துகளின் வீரம் செறிந்த வரலாற்றின் சிறு பதிவாக, ஒரு உண்மைக்கதையை மையமாக கொண்டு உருவாக்கபட்ட குறும்படம் காலம்.

விடுதலைக்காக தம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மண்ணுக்காக தியாகம் செய்த எத்தனையோ குடும்பங்களை திரும்பவும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான ஒரு படைப்பாகும்.

இந்த குறும் படம் போராட்ட களத்தை நினைவு படுத்தினாலும் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படத்தின் படத்தின் இயக்குனர் ரமணன், படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒப்பனை போன்றவற்றை விஜிதன் சொக்கா அவர்களும் இசை ஜெனார்த்திக் அவர்களும் செய்திருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களால் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கபட்ட குறும்படங்களில் எம்மாலும் உலக தரத்துக்கு படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகிற ஓர் திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது.

Advertisements